Last Updated : 16 Jul, 2016 11:04 AM

 

Published : 16 Jul 2016 11:04 AM
Last Updated : 16 Jul 2016 11:04 AM

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இந்த ஆண்டு இறுதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் ஊழல் வழக்கில் இந்த ஆண்டு இறுதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அதிமுக்கிய பிரமுகர்களின் பயணத்துக்காக, 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் அகஸ் டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத் துடன், ரூ.3,600 கோடி மதிப்பில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இதை வெற்றிகரமாக நிறை வேற்ற, இந்தியாவின் முக்கிய புள்ளிகளுக்கு ரூ.360 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக இத்தாலியில் 2011-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்நிறு வனத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவில் 2013-ம் ஆண்டிலேயே எஸ்.பி.தியாகி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டாலும், இதுவரை உருப்படியான நடவடிக்கை எதுவுமில்லை என குற்றச்சாட்டு உள்ளது.

எனவே, உச்ச நீதிமன்ற கண் காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இத்தாலியின் மிலன் நீதி மன்றம், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட் டோருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டது.

இதற்கு பதில் அளிக்குமாறு, கடந்த மே 6-ம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு, இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கிவிட்டது. யாரும் சட்டத்துக்கு அப்பாற் பட்டவர்கள் கிடையாது.

இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து, இந்த ஆண்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விடும்’ எனத் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x