Published : 01 Dec 2014 02:58 PM
Last Updated : 01 Dec 2014 02:58 PM

நேதாஜி கோப்புகளை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்தான கோப்புகளை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதில் உள்ள சில விஷயங்கள் அயல்நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 41 கோப்புகள் உள்ளன என்பதை மட்டும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது, அப்போது பாஜக தலைவராக ராஜ்நாத் சிங், நேதாஜியின் மரணத்தைப் பற்றிய மர்மத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட வேண்டும் என்றும், "ஒட்டுமொத்த நாடும் நேதாஜியின் மரணம் பற்றி அறிய பொறுமையின்றி காத்திருக்கிறது" என்று அப்போது ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

ஆனால், இப்போதைய மறுப்பு, தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் 14 மாதங்களுக்கு முன்பு செய்த மனுவிற்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

1953 முதல் 2,000ஆம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட கோப்புகளின் பட்டியலை அளித்தது மத்திய அரசு. ஆனாலும் நேதாஜி மறைவு பற்றிய மர்மத்திற்கான காரணங்கள் என்னவென்பதை வெளிப்படுத்தும் மற்றும் நீதிபதி முகர்ஜி கமிஷன் விசாரணை அறிக்கை உள்ளிட்ட பல விசாரணைகள் அடங்கிய 21 கோப்புகள் உள்ளன.

இது தவிர 10 கோப்புகள் ‘வெளியிடத் தகுந்தவை’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்தக் கோப்புகள் பற்றிய உள்விவரங்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளது.

வெளியிட முடியாத கோப்புகளில் ஒன்று, 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் ஜப்பான் ரன்கோஜி கோயில் ஒன்றில் நேதாஜியின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது பற்றியது.

நேதாஜி பற்றிய விவரங்களை வெளியிட்டால் அயல்நாட்டு உறவுகள் பாதிக்கும் என்று கூறியுள்ள பிரதமர் அலுவலகம், எந்தெந்த அயல்நாடுகள் என்பதைக் கூறவில்லை.

பாஜக அரசு ஏற்கெனவே, சீனாவுக்கு எதிரான 1962-ஆம் ஆண்டு போர் குறித்த ஹெண்டர்சன் புரூக்ஸ்-பகத் அறிக்கையின் விவரங்களையும் வெளியிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் நேதாஜி பற்றிய கோப்புகளை வெளியிட மறுத்ததிலும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையையே தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கடைபிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x