

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை யில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, இரு அவை களின் கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் என்.என்.வோரா உரையாற்ற இருந் தார்.
ஆனால், காஷ்மீரில் தொடரும் வன்முறை பிரச்சினைகளை முன் வைத்து, ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி-பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அமளி நீடித்ததால், ஆளுநர் வோரா, தனது உரையை அவசர மாக முடித்துக்கொண்டு வெளி யேறினார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ரவிந்தர் ரெய்னா கூறும்போது, ‘சட்டப்பேரவையில் தேசிய கீதம் ஒலித்த சமயத்தில் கூட, தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட னர். ஆளுநரும் வெளியேறினார். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். இதற்காக காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகளும், ஆளுநரும் மன் னிப்பு கோர வேண்டும்’ என்றார்.
காஷ்மீரில் கடந்த 2 மாதங் களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்த நிலையில், ஆளும் கூட்டணி அரசை பேரவையில் தனிமைப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் வெகுவாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் மாநில தலைவர் குலாம் அகமது மிர் கூறும் போது, ‘அனைத்து மட்டங்களிலும் அரசு தோல்வியை சந்தித்திருக்கும் இந்த சூழலில், அரசிடம் கேள்வி களை முன்வைக்க எதிர்க்கட்சி களுக்கு உரிமை உள்ளது. மக்கள் சார்பில் பதிலைக் கேட்டு வாங்க வேண்டிய கடமையும் எதிர்க்கட்சி களுக்கு உள்ளது’ என்றார்.