சித்தூரில் யானைகள் தாக்கி இருவர் படுகாயம்

சித்தூரில் யானைகள் தாக்கி இருவர் படுகாயம்
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கிராமத்துக்குள் கூட்டமாக புகுந்த யானைகள் விரட்ட வந்தவர்களைத் தாக்கின. இதில் இரு வனத் துறை ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமநேர் வனப்பகுதி தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள கலவபல்லி என்ற கிராமத்துக்குள் யானைகள் கூட்டமாக புகுந்து பயிர்களை நாசம் செய்தன. இதனால் பதறிப்போன கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் கலவ பல்லி கிராமத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியடிக்க முயன் றனர். அப்போது அங்கு திடீரென வந்த மேலும் 5 யானைகள் அங் கிருந்த அனைவரையும் தாக்கின. இதில் வனத் துறை ஊழியர்களான சிட்டிபாபுவும், கிரணும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவருக்கும் தற்போது பலமநேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in