Last Updated : 22 Aug, 2015 04:22 PM

 

Published : 22 Aug 2015 04:22 PM
Last Updated : 22 Aug 2015 04:22 PM

தேசிய பாதுகாப்பு செயலர்கள் மட்ட பேச்சு பயங்கரவாதம் குறித்தே: ராஜ்நாத் திட்டவட்டம்

இந்திய-பாகிஸ்தான் தேசிய பாதுபாப்பு செயலர்கள் மட்ட பேச்சு வார்த்தைகள் பயங்கரவாதம் குறித்தே என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உஃபாவில் இதற்கான திட்டங்கள் உருவாயின. அதிலிருந்து பாகிஸ்தான் மீறுதல் கூடாது என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ஆனால், பாகிஸ்தானோ, காஷ்மீர் பிரச்சினையை உள்ளடக்காமல் பேச்சு வார்த்தையில் அர்த்தமில்லை என்று தொடர்ந்து கூறிவருவதோடு, பிரிவினை வாத ஹூரியத் தலைவர்களை சந்திப்போம் என்ற நிலைப்பாட்டையும் கைவிட மறுக்கிறது.

இந்நிலையில் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது: “உஃபாவில் இருநாட்டு பிரதமர்கள் இடையேயும் நடைபெற்ற பேச்சுகளில் நடைபெறவிருக்கும் பேச்சு வார்த்தைகளுக்கான திட்டம் உருவானது, இது இருதரப்பினருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

எனவே இந்தியா அந்த திட்டத்திலிருந்து மாறுவதாக இல்லை. எங்கள் திட்டம் ஒன்றுதான், எந்த பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் அது பயங்கரவாதம் குறித்து மட்டுமே.

எனவே, பேச்சுவார்த்தைக்கு இந்தியா விரும்புகிறது, அவர்கள்தான் இனி முடிவெடுக்க வேண்டும், சந்திப்பு நடைபெறுவது குறித்து பாகிஸ்தானே முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

ஹூரியத் தலைவர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் சர்தாஜ் அஜிஸ் சந்திப்பது தூண்டி விடும் செயல் என்றும் அதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் ராஜ்நாத் சிங் நேற்றே தெரிவித்திருந்தார்.

ஆனால், ஹூரியத் தலைவர்களை சந்திப்பது வழக்கமான நடைமுறையே, கடந்த கால செயல்முறையின் தொடர்ச்சியே என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு செயலர் மட்ட பேச்சுகள் இழுபறி நிலையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x