கர்நாடகாவில் விபத்தில் கவிழ்ந்த லாரியிலிருந்து சிதறிய பீர் பாட்டீல்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

கர்நாடகாவில் விபத்தில் கவிழ்ந்த லாரியிலிருந்து சிதறிய பீர் பாட்டீல்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்
Updated on
1 min read

பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் சாலையில் பீர் ஆறு ஓடியது. இதில் உடையாமல் இருந்த பீர் பாட்டீல்களை பொது மக்கள் அள்ளிச் சென்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்க ளூருவை அடுத்துள்ள நெல மங்களாவில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர், யூபி பீர் நிறுவனம் உள்ளது. இங்குள்ள கிடங்கில் இருந்து பீர் பாட்டில்கள் ஏற்றப்பட்ட லாரி ஒன்று நேற்று ஹாசன் நகருக்கு சென்று கொண்டிருந்தது. தும்கூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதனால் லாரியில் இருந்த‌ பீர்பாட்டில்கள் உடைந்ததால் சாலையில் பீர் ஆறு ஓடியது. இதைக் கண்ட அப்பகுதி பொது மக்கள், லாரியில் இருந்தவர்களை மீட்க முயற்சிக்கவில்லை. மாறாக சாலையில் சிதறி, உடையாமல் இருந்த பீர் பாட்டீல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிலர் நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து, போட்டிப்போட்டுக் கொண்டு பீர் பாட்டீல்களை அள்ளிச் சென்றனர்.

இதையடுத்து சம்பவ இடத் துக்கு வந்த தும்கூர் போக்குவரத்து போலீஸார், குடிமகன்களை அங் கிருந்து விரட்டினர். உடனடியாக லாரியை அப்புறப்படுத்தி, போக்கு வரத்தைச் சீர்ப்படுத்தினர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in