Last Updated : 16 Apr, 2017 11:35 AM

 

Published : 16 Apr 2017 11:35 AM
Last Updated : 16 Apr 2017 11:35 AM

சிக்கிம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

சிக்கிம் மாநிலத்தில் அப்பர் புர்துக் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎப்) வேட்பாளர் டில்லி ராம் தாப்பா வெற்றி பெற்றார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் இவர் 8,406 வாக்குகள் பெற்றார். இவரை தொடர்ந்து, பாஜக வேட்பாளர் கனால் சர்மா 374 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் சுமித்ரா ராய் 98 வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர்.

இடைத்தேர்தலில் 5 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இவர்கள் மொத்தம் 449 வாக்குகள் பெற்றனர். நோட்டாவுக்கு 100 வாக்குகள் பதிவாகின.

தொகுதி எம்எல்ஏ பிரேம்சிங் தமாங், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இங்கு கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடை பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x