

அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என உலக அளவில் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்திருக்கிறார்.
அணு ஆயுதமில்லா உலகு, கோட்பாட்டிலிருந்து நிஜத்தை நோக்கி என்ற தலைப்பில் புதன்கிழமை நடந்த சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மன் மோகன்சிங் ஆற்றிய உரை வருமாறு: தாம் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் பிறரை அச்சுறுத்தவே என்பதை அங்கீகரித்து அது பற்றிய விவரங்களை பிரகடனப்படுத்தினால் முதலில் பயன்படுத்தமாட்டோம் என்கிற ஒப்பந்தம் செய்துகொள்ள நாம் வழி காணலாம்.
அணு ஆயுதங்களை வைத்திருப்பதன் நோக்கமே பிற நாடுகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க அவற்றை மிரட்டவே என்கிற குரல் எங்குமே கேட்கிறது.
அணு ஆயுதங்களுக்கு தரப் படும் முக்கியத்துவத்தை குறைப் பது மிகவும் அவசியமா னது. ஆயினும் இதை ஒரு நாடு தனித்துச் செய்து சாதிக்க முடியாது. பல நாடுகள் இணைந்த ஒப்பந்தம் இதற்குத் தேவைப் படுகிறது.
அணு ஆயுதமில்லா உலகு அமைவதை இந்தியா ஆதரிக்கிறது. ஆயினும் கடின மான பாதுகாப்பு நிலவரம் காரண மாகவே அணு ஆயுத வல்லமை படைத்த நாடு என தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
1974ல் தமது அணு ஆயுத திறனை உலகுக்கு உணர்த்திய இந்தியா அதன் பின்னர் சுமார் 25 ஆண்டுகள் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டது. இந்நிலையில் கடினமான பாதுகாப்பு சூழல் காரணமாக 1998ல் அணு ஆயுத சோதனை நடத்தியது.
அணு ஆயுதங்கள் பேரழிவு சக்தி கொண்டவை. பொது நல னுக்கும் உதவக்கூடியது அணு சக்தி. அணுசக்தி தொழில் நுட்பத்தை அமைதி நோக்கங்க ளுக்கு பயன்படுத்தி மனித சமுதாயத்துக்கு பலன் தருவதாக உறுதிசெய்யும் அதே வேளையில் பேரழிவுக்கு அதை பயன்படுத்தாதிருக்க வழி காணவேண்டும்.
பொறுப்புமிக்க அணு ஆயுத நாடாக, அணு ஆயுதங்களை அதிகரிப்பதில் ஈடுபாடு காட்டு வதில்லை என்ற முடிவில் தெளி வாக இருக்கிறது இந்தியா. அணு ஆயுதமில்லா உலகம் என்பது இந்தியாவின் பாதுகாப்பை மட்டும் அல்ல உலகத்தின் பாதுகாப்பையே அதிகரிக்கும் என்றார் மன்மோகன் சிங்.