Last Updated : 10 Jun, 2017 04:55 PM

 

Published : 10 Jun 2017 04:55 PM
Last Updated : 10 Jun 2017 04:55 PM

விடுதலைக்காக மட்டும் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை கலைக்கக் கூறியவர் காந்தி: அமித் ஷா பேச்சுக்கு கடும் கண்டனம்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

எந்த ஒரு கொள்கையோ, நோக்கத்தின் அடிப்படையிலோ காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட வில்லை. விடுதலைப் பெற வேண் டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வாகனம்தான் காங்கிரஸ். அந்த அமைப்பில் மவுலானா ஆசாத், பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்ற இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் உட்பட பலர் இருந்தனர். பல்வேறு கொள்கைகள், சிந்தனை கொண்ட வர்கள் விடுதலைக்காக தங்களை காங்கிரஸில் இணைத்துக் கொண்டனர். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பனியா (வாணிபம்) குடும்பத்தில் பிறந்த மகாத்மா காந்தி அறிந்திருந்ததால், நாட்டுக்கு விடுதலை கிடைத்தவு டன் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று ஆலோசனை கூறினார். காந்தியால் அப்போது அதை செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது சிலர் காங்கி ரஸை கலைக்கும் எண்ணத்தை நிறைவேற்றி வருகின்றனர்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

காங்கிரஸ் கண்டனம்

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷைலேஷ் நிதின் திரிவேதி கூறும் போது, ‘‘தேசத் தந்தையைப் பற்றி அமித் ஷா விமர்சனம் செய்திருப் பது கடும் கண்டனத்துக்கு உரியது. அரசியலில் எல்லை மீறி விட்டார் அமித் ஷா’’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டெல்லி யில் நேற்று கூறும்போது, ‘‘அமித் ஷாவின் பேச்சு விடுதலைப் போராட்ட வீரர்கள், மகாத்மா காந்தியை அவமரியாதை செய்வதாக உள்ளது’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

காந்தி சிரித்திருப்பார்

மகாத்மா காந்தியின் பேரனும் மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கூறும்போது, “தன்னுடைய கேலிச் சித்திரத்தைப் பார்த்து காந்தி சிரித்திருக்கிறார். ஆனால் சாமர்த்தியமான வியாபாரி காந்தி என்ற அமித் ஷாவின் கருத்தை கேட்டிருந்தாலும் அவர் சிரித்திருப்பார்” என்றார்.

‘காந்திக்கு பிந்தைய இந்தியா’ என்ற நூலை எழுதிய ராமச்சந்திர குஹா கூறும்போது, “நாட்டை ஆளும் கட்சியின் தலைவர் ஒருவர் காந்தியை இப்படி விமர்சித்திருப் பது அவரது குறுகிய மனப்பான் மையையும் அறியாமையையும் வெளிப்படுத்துகிறது” என்றார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “அமித் ஷாவின் கருத்து அறநெறிக்கு மாறானது. இந்தக் கருத்தை வாபஸ் பெறுவதுடன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, “தேசத் தந்தையான காந்தியை அனைவரும் மதிக்க வேண்டும். உலக அளவில் போற்றப்படும் தலைவரை பனியா என குறிப்பிட்டிருப்பது மோசமான ரசனை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x