

மக்களவையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை யாற்றினார். பொருளாதார ஆய் வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் 2017-2018-ம் நிதி யாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படு கிறது. இதேபோல முதல்முறையாக பிப்ரவரி 28-க்குப் பதிலாக பிப்ரவரி 1-ம் தேதியே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் மேலோங்கியுள்ளது. பட்ஜெட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் வகையிலும் வரிஏய்ப்பு களை தடுக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
இதேபோல ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாது காப்பு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “மக்களவையில் புதன்கிழமை பொதுபட்ஜெட்டை தாக்கல் செய் கிறேன். அதைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பாக ட்விட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்’’ என்றார்.