

“எனது சொத்து விவரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என்று ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் வருத்தம் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு லோகேஷ் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின்போது அவர் தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அதில் தனக்கு ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தனது மனைவி பிராம்மனிக்கு ரூ.28 கோடி சொத்துகளும் 2,325 கிலோ தங்க நகைகளும், 310.06 காரட் வைர நகைகளும், 97.441 கிலோ வெள்ளிப் பொருட் களும் உள்ளதாக குறிப்பிட் டுள்ளார்.
இது தவிர, தனது ஒரு வயது மகனுக்கு ரூ.11 கோடி சொத்துகள் உள்ளதாக கூறியுள்ளார். இந்தப் பட்டியல் ஆந்திர அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 5 மாத காலத்தில் இவரது சொத்துகள் எப்படி 23 மடங்கு உயரும் என கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு லோகேஷ் நேற்று சமூக வலைதளத்தில் பதில் அளிக்கும்போது, “எனது சொத் துக்கணக்கு குறித்து எதிர்க் கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சொத்து விவரங்களைச் சந்தை நிலவரப்படி வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதால், அதன்படியே நான் வெளி யிட்டேன்.
நாட்டிலேயே சொத்துக் கணக்குகளைப் பகிரங்கமாக வெளியிட்ட அரசியல் குடும் பத்தை சேர்ந்தவன் நான். ஆனால் 12 வழக்குகளில் 2-வது குற்றவாளியாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி என்னைப் பற்றி பேசுவதா?” என்று குறிப்பிட்டுள்ளார்.