Published : 04 Aug 2016 07:59 AM
Last Updated : 04 Aug 2016 07:59 AM

ஜிஎஸ்டி மசோதாவை ஆதரித்து 203 எம்.பி.க்கள் வாக்களிப்பு: அனைத்து கட்சிக்கு பிரதமர் நன்றி

மக்களவையில் நேற்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி) ஆதரித்து 203 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதே கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மசோதா, 10 ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை ஆதரித்து 203 பேர் வாக்களித்தனர். எதிர்த்து யாரும் வாக்களிக்கவில்லை. இதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கை எட்டிவிட்டதாக பாஜக கூறியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் கூறும் போது, ‘‘ஜிஎஸ்டி மசோதா நிறை வேற்றப்பட்டது வரலாற்று நிகழ் வாகும். இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து கட்சி தலை வர்கள், உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கி றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x