

மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் கட்சி நிர்வாகிகள் கொண்ட பாஜக பிரதிநிதிகள் குழு டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முக்தர் அப்பாஸ் நக்வி, ‘பழம்பெரும் கட்சியான காங்கிர ஸின் புதிய தலைவர் தங்கள் கட்சிச் சின்னத்துக்கு மத அடையாளம் கொடுப்பதன் மூலம், தேர்தலை மத ரீதியானதாக மாற்ற முயற்சிக்கிறார்.
இது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், உச்ச நீதிமன்றம் வகுத் தளித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதி களுக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை முடக்குவதுடன் அக்கட்சித் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.