Published : 02 Feb 2017 08:26 AM
Last Updated : 02 Feb 2017 08:26 AM

மத்திய பட்ஜெட் 2017 - 18ல் ஆதாயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள்

பொதுவாக பட்ஜெட் தாக்கலில் பெரும்பாலா னவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். பொதுமக்களின் நலன் பட்ஜெட்டில் பிரதா னமாக கருதப்படும். இருப்பினும் எந்தவொரு பட்ஜெட்டிலும் சிலருக்கு பாதிப்பும், சிலருக்கு சாதகமான அம்சங்களும் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சாதக மடைந்த துறைகள், தொழில்கள் விவரம் வருமாறு:

ரியல் எஸ்டேட்:

குறைந்த விலையிலான குடியிருப்புகள் கட்டித் தருவதால் இத் துறைக்கு கிடைத்துள்ள அந்தஸ்து மூலம் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடு என்பதே அரசின் இலக்கு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குறைந்த விலை குடியிருப்புகளை உருவாக்கும் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ், ஆஷியானா ஹவுசிங், டாடா ஹவுசிங், வேல்யூ மற்றும் பட்ஜெட் ஹவுசிங் கார்ப்ப ரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு இது சாதகமான அறிவிப்பாகும்.

நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பானது சொத்து வாங்கிய இரண்டாம் ஆண்டிலிருந்து கணக்கிடப்படும். இது முன்னர் மூன்று ஆண்டாக இருந்தது. இது வீடு விற்பனையை ஊக்குவிக்கும். டிஎல்எப் லிமிடெட், ஓபராய் ரியால்டி, கோத்ரெஜ் பிராப் பர்டீஸ், பிரஸ்டிஜ் எஸ்டேட்ஸ் நிறுவனங் களுக்கு இது சாதகமான அம்சமாகும்.

கட்டமைப்புத் துறை:

இத்துறைக்கு ஜேட்லி தனது பட்ஜெட்டில் ரூ.64 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார். தேசிய மற்றும் மாநில சாலைகளுக்கு இது ஒதுக்கப்பட்டுள்ளது. இது கட்டமைப்பு நிறுவனங்களை ஊக்குவிப்பதாக இருக்கும். அத்துடன் சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும்.

நுகர்வோர் மற்றும் சில்லரை வர்த்தகம்:

தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பில் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வட்டி குறைக்கப்பட்டிருப்பதால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ், மாரிகோ லிமிடெட், டாபர் இந்தியா நிறுவனங்களுக்கு இது ஆதாயமாக அமையும்.

வேளாண் துறை:

கிராமப்புற பொருளா தாரத்தை மேம்படுத்த விவசாயம் மற்றும் அது சார்ந்த பிற துறைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 24 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 1.867 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால பாசன திட்டங்களுக்கு ரூ. 10 லட்சம் கோடியில் நிதியம் ஏற்படுத்துவது எனவும் அதில் முதல் கட்டமாக ரூ. 40 ஆயிரம் கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வேளாண் உற்பத்தி, கிராமப்புற பொரு ளாதார மேம்பாட்டுக்கு உதவும். வேளாண் கருவிகள் தயாரிக்கும் நிறு வனங்கள், விதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஜெயின் இர்ரிகேஷன், மஹிந்திரா அண்ட் மஹிந் திரா, மான்சான்டோ இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஆதாய மடையும்.

எரிவாயு இறக்குமதி:

திரவ எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதிக்கான சுங்க வரி 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது சூழல் பாதுகாப்புக்கு உதவும். குறிப்பாக இதனால் உர ஆலைகள் பயனடையும். மேலும் இதனால் பெட்ரோனெட், கெயில் இந்தியா நிறுவனங்கள் ஆதாயமடையும்.

பாதகமாய் அமைந்த நிறுவனங்கள்

ஆட்டோமொபைல்:

பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு எவ்வித சலுகை யும் இதில் அறிவிக்கப்படவில்லை. ரூ. 3 லட்சம் வரையிலான ரொக்க பரிவர்த்தனை வரம்பு கார் விற்பனையை பெரிதும் பாதிக்கும். ஆட்டோமொபைல் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்கான வரிச் சலுகை கிடைக்கும் என இத்துறை எதிர்பார்த்தது.

ஜேட்லியின் பட்ஜெட் டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களான பாரத் போர்ஜ், மதர்சன் சுமி, பாஷ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஏமாற்றமளிப்பதாய் அமைந்தது.

எண்ணெய் துறை

எண்ணெய், எரிவாயு நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா நிறுவனங்களுக்கு பாதகமானதாகும்.

மின்னணுத் துறை

பிரின்டட் சர்கியூட் போர்டுக்கு கூடுதலாக 2 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஸ்மார் ட்போன் உற்பத்தியில் 50 சதவீதம் சர்கியூட் போர்டில்தான் உள்ளது. இறக்குமதியைக் குறைக்கவும் உள்நாட்டிலேயே இதைத் தயாரிக்கவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களின் விலை உயர வழி ஏற்படுத்தியுள்ளது.

பெரிய நிறுவனங்கள்

நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்த தன் மூலம் சிறு, குறுந்தொழில் நிறுவனங் களுக்கு சாதகமான அம்சமாகும். தனி நபர் வருமானம் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை உள்ளவருக்கு 10 சதவீத சர்சார்ஜ் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x