Last Updated : 02 Aug, 2016 02:43 PM

 

Published : 02 Aug 2016 02:43 PM
Last Updated : 02 Aug 2016 02:43 PM

சுனாமி எச்சரிக்கை தொழில்நுட்பத்தில் புதிய பாய்ச்சலுக்குத் தயாராகும் இந்தியா

2017-ம் ஆண்டு சூப்பர் கணினி செயல்படத் தொடங்கியவுடன் விரைவுகதியிலான தரவு நிர்ணயம் மற்றும் சுனாமி பற்றிய துல்லியமான விரைவு எச்சரிக்கைகள் சாத்தியம் என்கிறது கடல் தகவல் சேவைகள் இந்திய தேசிய மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சுனாமியால் பாதிக்கப்படும் அதிகபட்ச பரப்பளவு, அலையின் உயரம் மற்றும் தாக்கம் ஆகியவற்றை துல்லியமாகக் கணிக்கும் தொழில்நுட்பத்திற்கு நாம் தயாராகிக் கொண்டிருப்பதாக கடல் தகவல் சேவைகளின் இந்திய தேசிய மைய இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ்.சி. ஷெனாய் தெரிவித்தார்.

தற்போதைய தொழில்நுட்பத்தின் படி எந்த இடம் மூழ்கும், எந்த அளவுக்கு மூழ்கும் என்ற தரவுகளே கிடைக்கின்றன.

“தற்போது நாம் பொதுவான அளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கின்றோம் இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் ஏற்படுகிறது. எச்சரிக்கை முறை தொழில்நுட்பம் இன்னும் புதுமையடையும் போது அரசு எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி மக்களை வெளியேற்றுவது போன்றவை துரித கதியில் முன் கூட்டியே செய்வதற்கு உதவும். மேலும் ஒரு கட்டிடம் எந்த அளவுக்கு மூழ்கும் என்பதைத் தெளிவாகக் கூறிவிட முடியும்” என்கிறார் ஷெனாய்.

இதற்காக கடற்கரை பகுதி முழுதையும் தேசிய தொலை உணர் கழகம் மேப் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது கிழக்குக் கடற்கரைப் பகுதியான பாராதீப் முதல் கொச்சி வரை செய்யப்பட்டுள்ளது. மேற்குக் கடற்கரை பகுதியில் இவ்வகையான மேப் இன்னும் ஓராண்டுக்குள் உருவாக்கப்படும். கடல் வெப்ப நிலை, நீரின் வேகம் மற்றுன் அழுத்தம் ஆகியவற்றைக் கணக்கிடும் தொழில்நுட்பமும் விரைவில் கைகூடுகிறது. இவை 6 மணிக்கொருதரம் தரவுகளை அளிக்கும்.

அதாவது கிடைக்கும் தரவுகளை விளக்கம் அளிப்பது ஒரு சிக்கலான நடைமுறையாக இருந்து வருகிறது, உயர் தொழில்நுட்பத்தின் வருகையால் இனி பிழைகளை தவிர்க்க முடியும் என்கிறார் ஷெனாய்.

2017-ல் சூப்பர் கணினி செயல்படத்தொடங்கி விட்டால் தரவின் தன்மையை விரைவில் நிர்ணயம் செய்து துல்லியமான எச்சரிக்கைகளை விடுக்க முடியும் என்கிறார் ஷெனாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x