Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM

புதுவையில் 186 ஆண்டு பழமையான ரோமன் ரோலண்ட் நூலகத்தின் பரிதாப நிலை

புதுவையில் 186 ஆண்டு பழமையான ரோமன் ரோலண்ட் நூலகம் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தடுமாறுகிறது. கணினிமயமாக்கல் நிறுத்தம், நிதிநெருக்கடி ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள் என கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றான புதுவை ரோமன் ரோலண்ட் நூலகம் பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்தபோது தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 186 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்நூலகத்துக்கு, புகழ் பெற்ற பிரெஞ்சு கல்வியாளரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பருமான ரோமன் ரோலண்டை கவுரவிக்கும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்டது.

புகழ்பெற்ற இந்நூலகத்தின் தற்போதைய நிலை அதிர்ச்சி யளிக்கிறது. நூலக தரப்பில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

புதுவையிலுள்ள 4 பிராந்தியங் களில் உள்ள 55 நூலகங்களில் முதன்மையானது இந்நூலகம்தான். மொத்தம் 55 ஆயிரம் பேர் இந்நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நூலகத்துக்கு வருகின்றனர். 3.80 லட்சம் புத்தகங்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் தொடக்கத்தில் 64 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். ஆனால் தற்போது வெறும் 20 ஊழியர்களே பணிபுரிகின்றனர்.

புதுச்சேரியில் தொடக்கத்தில் கல்வித் துறையின் கீழ் இருந்த நூலகத் துறை, பணிச்சுமை கருதி கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. கலைபண்பாட்டுத் துறை இயக்குநர் தான் இதற்கு பொறுப்பு அதிகாரி ஆவார். ஆனால் நூலகத்துறைக்கு தொடர்பு இல்லாத அதிகாரிகளால் நூலகத் துறை தற்போது தேக்கம் அடைந்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு ரோமன்ரோலண்ட் நூலகத்தை தேசிய தகவல் மையம் உதவியுடன் கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ’ஈ-கிரந்தாலயா’ மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அம்மென்பொருள் சரிவர உதவிகரமாக இல்லாத நிலை இருந்தது. இதனால் கணினி மயமாக்குவது நிறுத்தப்பட்டது என்றனர்.

’நூலகத்துக்கு சரியாக செய்தி தாள்கள், வார, மாத இதழ்கள் வருவதில்லை. மேலும் புதிய நூல்களும் வாங்கவே இல்லை.பணியாளர்களை பார்த்து விசாரித்தால் நிதி பிரச்சினை

என்றே பதில்வருகிறது’ என நூலகத்துக்கு வரும் வாசகர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x