

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
ரூ.50 கோடிக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான வரி 30 சத வீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்று ஜேட்லி குறிப்பிட்டார்.
குறு, சிறு தொழில்துறையைப் பொறுத்தமட்டில் ரூ. 2 கோடிக்கும் குறைவாக வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான வரி 8 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
இதேபோல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் 7 ஆண்டுகளில் லாபம் ஈட்டும்போது 3 ஆண்டுகள் மட்டும் வரி செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் உத்தரவாத தொகை ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடி யாக உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பில் 90 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. இத் துறைதான் இன்னமும் ஜிஎஸ்டி முறைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இத்துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி தேவைப்படும் என மதிப் பிடப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன் தொகை யில் குறிப்பிட்ட அளவு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு அளிக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இருப் பினும் வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்ததால் குறு, சிறு தொழில் துறையினருக்கான கடன் வழங்கும் அளவு கணிசமாக குறைந்தது. மேலும் பெரும்பாலான வங்கிகள் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க தயக்கம்காட்டின. இந்தப் பிரச்சினை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கவனத் துக்குக் கொண்டு சென்றபோது இதைக் கவனிப்பதாக அவர் கூறியிருந்தார்.