

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தேர்தல் ஆணையம், இந்நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய செய்திதொடர்பாளர் கூறும்போது, ‘‘சர்வதேச வள மேம்பாடு என்ற அமைப்பு வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை இந்தி நாளிதழில் வெளியிட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126 ஏ மற்றும் பி பிரிவின்படி இது அப்பட்டமான விதிமீறலா கும். தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வமான உத்தரவுகளை மீறிய செயலாகும். இது தொடர்பாக உத்தரப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது’’ என்றார்.