

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் இன்று சீனா புறப்பட்டுச் சென்றார்.
நாளை, சீன பிரதமர் லீ கெக்கியங்கை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் சீன அதிபர் ஜின்பிங் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
சீன பயணத்தின் போது, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்தும் பிரதமர் அலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் வியாழக்கிழமை இந்தியா திரும்புகிறார்.