Last Updated : 27 Nov, 2014 08:54 AM

 

Published : 27 Nov 2014 08:54 AM
Last Updated : 27 Nov 2014 08:54 AM

ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை தாக்கல்

சாமியார் நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை முடிவுகள் குறித்த 31 பக்க அறிக்கையை ராம் நகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கர்நாடக சிஐடி போலீஸார் நேற்று தாக்கல் செய்தனர்.

நித்யானந்தா மீது அவரது முன்னாள் பக்தை ஆர்த்திராவ் கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த‌ செப்டம்பர் 8-ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.

விக்டோரியா மருத்துவமனை தலைமை மருத்துவர் துர்க்கண்ணா தலைமையில் நடைபெற்ற ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா சரியாக ஒத்துழைக்க வில்லை. அதனால் மீண்டும் அவரை ஆண்மை பரிசோத னைக்கு உட்படுத்த வேண்டும் என கர்நாடக சிஐடி போலீஸார் ராம்நகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளனர்.

31 பக்க அறிக்கை தாக்கல்

இந்நிலையில் நித்யானந்தா வுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கு ராம்நகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நித்யானந்தா மற்றும் அவரது 5 சீடர்கள் ஆஜராகின‌ர்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக சிஐடி போலீஸ் துணை கண்காணிப்பாளர் பி.லோகேஷ், நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை முடிவுகள் குறித்த 31 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், இவ்வழக்கில் 150 பக்க அளவு கூடுதல் குற்றப் பத்திரிக்கையையும் தாக்கல் செய்தனர். நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.

தென்கொரியா செல்கிறேன்

இதனைத் தொடர்ந்து நித்யானந்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஷ், “வரும் டிசம்பர் 10-ம் தேதி தென்கொரி யாவில் சர்வதேச ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நித்யானந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளது. எனவே, அவரை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

அதற்கு நீதிபதி மஞ்சுளா, “நித்யானந்தா வெளிநாடுகளுக்கு செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதா? முடக் கப்பட்ட அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? ''என கேள்வி எழுப்பினார்.அதற்கு நித்யானந்தாவின் வழக்கறிஞர் நாகேஷ், 'வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.தேவைப்பட்டால் இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப் பித்த ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக் கிறோம்''என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வடவடகி, ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி மஞ்சுளா, வழக்கின் அடுத்தகட்ட விசார ணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

31 பக்க அறிக்கை

கர்நாடக சிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள ஆண்மை பரிசோதனை அறிக்கையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்திய போது அவர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

ஆண்மையை கண்டறிய அந்தரங்க பரிசோதனை நடத்த முயன்ற போது அவர் மறுத்து விட்டார். தனக்கு இதய கோளாறு இருப்பதால் இத்தகைய பரிசோதனை செய்யவிடமாட்டேன் என 8 பக்க அளவில் கடிதம் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் நித்யானந்தாவுக்கு ஹார்மோன்களின் நிலை, வயதுக்கு தகுந்த உடல் உறுப்புகள் வளர்ச்சி அனைத்தும் சரியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட‌ நித்யானந்தாவின் குரல் மாதிரி பதிவு மைசூருவில் உள்ள குரல் பரிசோதனை மையத்துக்கு அனுப் பப்ப‌ட்டது. அங்கு துல்லியமான முடிவுகள் கண்டுபிடிக்க முடிய வில்லை. எனவே தற்போது குஜராத்தில் உள்ள குரல் பரி சோதனை மையத்துக்கு நித்யானந்தாவின் குரல் மாதிரியை அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் இன்னும் வர வில்லை எனவும் சிஐடி போலீஸா ரின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் நித்யானந்தா வுக்கு எதிராக அழுத்தமான ஆதாரங்கள் எதுவும் கர்நாடக சிஐடி போலீஸாருக்கு கிடைக்க வில்லை. ஆதலால் அவருக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x