Published : 09 Nov 2014 11:19 AM
Last Updated : 09 Nov 2014 11:19 AM

‘கருப்பு பண பட்டியலை வெளியிடாததற்கு உரிய காரணத்தை சொல்லவில்லை’: மத்திய அரசு மீது சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடாத தற்கான தகுந்த காரணங்களைச் சொல்லவில்லை என்று மத்திய அரசு மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து செய்தியாளர் களிடம் கூறியதாவது: மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்த (டிடிஏஏ) விதிமுறைகளின்படி, வெளி நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிடமுடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இந்தக் காரணம் சரியானது அல்ல. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பிரிவு (ரகசிய காப்பு), பெயர்களை பகிரங்கமாக வெளியிடுவதைத் தடுத்தாலும், அதை நீக்கி பெயர்களை வெளியே கொண்டுவர முடியும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இதற்கு முன்பு நிதிய மைச்சராக இருந்தபோது, லீச்சென்ஸ்டீன் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை டிடிஏஏ-வின் கீழ் வெளியிடுமாறு ஜெர்மனி அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால், இப்போது மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்றால், டிடிஏஏ அடிப்படையில் கணக்கு விவரங்களை வெளியி டுமாறு கேட்டது தவறு.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் வெளியிட வேண்டும் என ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் வாதம் தவறானது என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள் ளேன்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது டிடிஏஏ அடிப் படையில் கணக்கு விவரங்களைக் கேட்டது தவறு, அதனால்தான் அதை வெளியிடமுடியவில்லை என்று பாஜக விமர்சனம் செய்தது. ஆனால் இப்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசும் அதே தவறைச் செய்துள்ளது.

கருப்பு பணத்தை மீட்போம்

இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கு மாறு கடந்த 2011-ல் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் காங்கிரஸ் அரசு அதைச் செய்யவில்லை? ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. எனவே, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை நாங்கள் மீட்டு கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x