

‘‘பட்ஜெட் கூட்டத் தொடர், ‘மகா பஞ்சாயத்து’ போன்றது. அது சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
பண மதிப்பு நீக்க விவகாரத்தை கிளப்பி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி யினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் எந்த அலுவலும் நடை பெறாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய் தது. இந்தக் கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற னர். ஆனால், சிட்பண்ட் மோடி வழக்கில் கட்சி எம்.பி.க்களை கைது செய்தது, பண மதிப்பு நீக் கத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திரிணமூல் காங்கிரஸ் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
மேலும், உ.பி., பஞ்சாப் உட்பட 5 மாநில தேர்தல்கள் நடை பெறுவதால், பட்ஜெட்டை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறிவிட்டது. இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் நாடாளு மன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று எல்லாப் பிரதிநிதி களையும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். தேர்தல் நேரங்களில் வேண்டுமானால் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாடாளுமன்றம் என்பது மகா பஞ்சாயத்து போன்றது. அது சுமுகமாக செயல்பட வேண்டும்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு எல்லா கட்சியினரும் சாதகமாக பதில் அளித்துள்ளனர். அவர்களும் அவை சுமுகமாக நடைபெற விரும்புகின்றனர். இவ்வாறு அனந்த் குமார் கூறினார்.
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், 5 மாநில தேர்தலை மனதில் கொண்டு, பிப்ரவரி 1-ம் தேதி (நாளை) முன்கூட்டியே தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும் போது, ‘‘பட்ஜெட் கூட்டத்தொடரை மத்திய அரசு முன்கூட்டி நடத்த திட்டமிட்டிருக்க கூடாது. கடந்த 2012-ம் ஆண்டு 5 மாநில தேர்தல் நடந்தபோது, மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் அரசு ஒத்திவைத்தது’’ என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, மார்க் சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கூறும்போது, ‘‘பண மதிப்பு நீக்கம் குறித்து பட் ஜெட் தொடரின் முதல் வாரத்தில் விவாதம் நடத்த வேண்டும்’’ என்றனர்.