

முக்கிய அலுவல் தொடர்பான விவாதங்களின்போது அதிகாரிகள் சிலர் சமூக வலைதளங்களை காண்பதால், தனது கூட்டங்களில் மொபைல் போன்கள் எடுத்து வருவதற்கு பிரதமர் மோடி தடை விதித்துள்ளார்.
டெல்லியில் நடந்த குடிமை பணிகள் தின நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘மாவட்ட நிலையிலான அதிகாரிகள் இப்பொழுதெல்லாம் மிக மும்முரமாக இருக்கின்றனர். அந்த மும்முரம் வேலையில் இல்லை. சமூக வலைதளங்களை பார்ப்பதில் இருக்கிறது. எனவே எனது கூட்டத்தின்போது அதிகாரிகள் மொபைல் போன்களை எடுத்து வரக்கூடாது.
மக்கள் நலனுக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டுமே தவிர, சுய-புகழ்ச்சிக்கும் பயன்பாட்டுக்கும் அல்ல.
போலியோ சொட்டுமருந்து குறித்து நான் சமூக வலைத்தளம் மூலம் தகவல் தருகிறேன், இந்தத் தேதியில் அவர்கள் போலியோ மருந்து எடுத்துக் கொள்ளாலாம் என்று தகவல் தருகிறேன் என்றால் சமூகவலைத்தளம் பயன் தரும். ஆனால் போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் பணியின் போது நான் என் புகைப்படத்தைப் பார்த்து என்னை நானே புகழ்ந்து கொண்டிருந்தால்.. இத்தகைய செயல்கள் கேள்வியை ஏற்படுத்தியது” என்றார் மோடி.