

உ.பி.யில் மாபியா கைதிகள் பலர் வேறு சிறைக்கு மாற்றப் பட்டுள்ளனர். சிறையில் அடைக் கப்பட்ட பிறகும் இவர்கள், வெளி யில் தங்கள் ஆட்களின் மூலம் சமூக விரோத மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மாபியா தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி லக்னோ சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார். தற் போது அவர் பண்டா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுபோல் சமாஜ்வாதி முன்னாள் எம்.பி. அட்டீக் அகமது, அலகாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய இவர் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். என்றாலும் இவர் தியோரியா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுபோல் உமேஷ் அகா கோவா ராய், கவுஸ்லேஷ் திரிபாதி உட்பட பலர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.