

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப் படுவதைப் போல கர்நாடகாவில் கம்பாளா, ஹோரி ஹப்பா ஆகிய விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என அரசியல் கட்சியின ரும், இளைஞர் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பாளா விளையாட்டு (எருமை பந்தயம்) போட்டியை நடத்தி வருகின்றனர். இதேபோல ஷிமோகா, ஹாவேரி, தாவண்கெரே ஆகிய மாவட்டங்களில் சங்கராந்தி திருவிழாவின் போது ‘ஹோரி ஹப்பா’ (காளையை அடக்குதல்) போட்டி நடத்தப்படும். இந்நிலையில் ஜல்லிக்கட்டைப் போல கம்பாளா, ஹோரி ஹப்பா போன்ற விளை யாட்டு போட்டிகளுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடகாவில் போராட் டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட் டம் நடைபெற்றதை தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டது.
இதேபோல கம்பாளா, ஹோரி ஹப்பா ஆகிய விளையாட்டு போட்டி களையும் நடத்த கர்நாடக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
மேலும் கம்பாளா போட்டி ஏற் பாட்டாளர்கள், விவசாய அமைப் பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மங்களூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து கர்நாடக முதல் வர் சித்தராமையா கம்பாளா, ஹோரி ஹப்பா ஆகிய போட்டிகள் நடத்து வது தொடர்பாக சட்ட நிபுணர் களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நீதிமன்ற தடை நீக்குவது, மத்திய அரசின் அனுமதியை பெறுவது, அவசர சட்டம் இயற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சித்தராமையா கூறும்போது, “கம்பாளா, ஹோரி ஹப்பா போன்ற கர்நாடக பண்பாட்டு விளையாட்டுகளை நடத்துவதற்கு அவசர சட்டம் இயற்றுவதில் எந்தத் தடையும் இல்லை. கர்நாடக அரசு அவசர சட்டம் இயற்றவும், பாரம்பரிய போட்டிகளை நடத்தவும் தயாராக உள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க முயல கூடாது” என்றார்.