

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது .
நாடு முழுவதும் முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று சஹாரா குழுமம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர், ரூ.20,000 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களை "செபி' அமைப்பிடம் ஒப்படைக்குமாறு சஹாரா குழுமத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும் உச்ச நீதிமன்ற அனுமதியின்றி சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் நாட்டை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.