Last Updated : 08 Jul, 2016 10:26 AM

 

Published : 08 Jul 2016 10:26 AM
Last Updated : 08 Jul 2016 10:26 AM

உயர் நீதிமன்றங்களில் 470 நீதிபதிகள் பற்றாக்குறை

நாட்டிலுள்ள 24 உயர் நீதிமன்ற நீதிபதிகளின் காலிப்பணியிட எண்ணிக்கை 470 ஆக அதிகரித் துள்ளது.

சட்ட அமைச்சகத்திடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, உயர் நீதிமன்றங்களில் கடந்த 2015-ம் ஆண்டு 392 நீதிபதிகள் காலிப் பணியிடங்கள் இருந்தன. இது, 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் 443 ஆக உயர்ந்தது. தற்போது ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 470 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.இதில் அதிகபட்சமாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 82 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

பஞ்சாப்- ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் 39 காலிப்பணி யிடங்களும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 37, ஆந்திரா-தெலங்கானா (36), கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 35 நீதிபதி காலிப்பணியிடங்களும் உள்ளன.

பஞ்சாப் - ஹரியாணா, ஆந்திரா-தெலங்கானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், பாட்னா, அலகாபாத், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்கள் தற்காலிக தலைமை நீதிபதியைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x