உத்தரப் பிரதேசம், மணிப்பூரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: வரும் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

உத்தரப் பிரதேசம், மணிப்பூரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: வரும் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
Updated on
1 min read

உத்தரப் பிரதேசம் மற்றுaம் மணிப்பூர் மாநிலங்களில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 7-வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் மொத்தம் 1.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 14,458 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக 32 தொகுதியிலும் பகுஜன் சமாஜ் அனைத்து (40) தொகுதிகளிலும், சமாஜ்வாதி 31-லும் காங்கிரஸ் 9-லும் போட்டியிடுகிறது. 535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மணிப்பூரில் மொத்தம் உள்ள 60-ல் 38 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் 98 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதனிடையே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நாளை மாலை 5.30 மணி வரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப் பதிவு முடிந்ததும் கருத்துக் கணிப்பை வெளியிடலாம் என ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், இது 24 மணி நேரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கோவா, பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து இந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in