

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2016-2017-ம் ஆண்டு சீசன் கால கட்டத்தில் ரூ.243.69 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இத் தகவலை கேரள சட்டப்பேரவையில் தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதில் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.89.70 கோடியும், பிரசித்தி பெற்ற அப்பம் விற்பனை மூலம் ரூ.17.29 கோடியும் கிடைத் துள்ளதாக, எழுத்துப்பூர்வமான பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நவம்பர் முதல் ஜனவரி வரை பக்தர்கள் இருமுடி சுமந்து வருகை தருகின்றனர். .
ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோயிலில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கென மத்திய அரசு ரூ.46.14 கோடியை ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்தார்.