

ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி, டெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறார் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதியில் பல்வேறு போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன.
கடந்த சனிக்கிழமை முதல், ஹைதாராபாத்தில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி,தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இன்று முதல் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கும் முன்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளயிருப்பதா கூறப்படுகிறது.