

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் மற்றும் குருதாஸ்பூரில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை உளவுத் துறை அதிகாரிகள் இடைமறித்து கேட்டதில், இந்த சதி திட்டம் அம்பலமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையின் பேரில், பாகிஸ்தான் எல்லையொட்டிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. மாநில போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பதான் கோட், குருதாஸ்பூர் மாவட்ட நுழைவுப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கையும் நடத்தப் படுகிறது. எல்லைப் பகுதியிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.