Published : 17 Mar 2014 09:56 PM
Last Updated : 17 Mar 2014 09:56 PM

தகுதியான வேட்பாளர் இல்லாவிட்டால் நோட்டாவை நாடுங்கள்: அண்ணா ஹசாரே

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நேர்மையானவராக இல்லையென்றால் நோட்டாவை பயன்படுத்துமாறு வாக்களர்களை அண்ணா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"ஆட்சி மாற்றத்தால் மட்டும் நம் தேசத்தில் பெரிய அளவில் மாற்றம் நிகழப்போவதில்லை. ஒரு கட்சி ஊழலில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால், அடுத்த கட்சி முதுகலை பட்டம் பெற்றுள்ளது. மாநிலத்திலும், தேசத்திலும் தீவிரமான மாற்றத்தை கொண்டு வர முடிந்தவர்கள் மட்டுமே சட்டமன்றத்திற்கும், மக்களவைக்கும் செல்ல வேண்டும்

ஊழல்வாதியை வேட்பாளராக எந்தக் கட்சியாவது நிறுத்தியிருந்தால், அந்தக் கட்சி செய்த தவறை தாங்கள் செய்யக் கூடாது என வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் தூண்களான வாக்காளர்கள், வேட்பாளர் நேர்மையானவராக இல்லையென்றால் நோட்டாவை பயன்படுத்த வேண்டும்.

அநீதிக்கு உள்ளாகும் வேட்பாளர்கள், தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், ஓட்டுக்காக கொடுக்கப்படும் பணத்தையும், விருந்தையும் பார்த்த பிறகு அதை மறந்து விடுகின்றனர்."

இவ்வாறு அண்ணா ஹசாரே தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x