

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து நேற்று மேலும் 5 சடலங்கள் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10- ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள பலுக்பாங் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக நேற்று முன் தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங் களை மீட்டனர். எனினும் நேற்று முன்தினம் மாலை மீண்டும் கனமழை குறுக்கிட்டதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத் தப்பட்டன. இந்நிலையில் நேற்று அதிகாலை மழை நின்றதை அடுத்து மீட்பு பணிகள் தொடங்கின. அப்போது இடிபாடு களில் இருந்து மேலும் 5 சடலங் கள் மீட்கப்பட்டன. இதையடுத்து நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித் துள்ளது.
இதற்கிடையில் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கட்டிடம், நான்கு அரசு கட்டிடம் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதனால் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள் வதற்காக மாநில முதல்வர் கலிக்கோபுல் கூடுதலாக ரூ. 1 கோடியை அறிவித்துள்ளார். அத்துடன் உடனடி தேவைக் காக ரூ.30 லட்சம் வழங்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.