

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு நடை பெற உள்ள வருடாந்திர பிரம்மோற் சவ விழா குறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சாம்பசிவ ராவ் பேசிய தாவது: பிரம்மோற்சவ விழாவிற்கு வரும் பக்தர்களுக்குத் தங்கு தடை யின்றி லட்டு பிரசாதங்கள் வழங்க வேண்டும். இதற்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பில் இருத்தல் அவசியம். மேலும், பிரம்மோற்சவத் திற்கு வரும் அனைத்து பக்தர் களும் திருப்திகரமாக சுவாமியை தரிசித்துச் செல்லும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதேபோன்று திருப்பதி, திருமலை யில் உள்ள தங்கும் அறைகளையும் மராமத்து செய்ய வேண்டும்.
தரிசனம், இலவச அன்னபிர சாதம், தங்கும் அறை, பாதுகாப்பு, போக்குவரத்து போன்றவற்றில் எந்தவித குறைகளும் இன்றி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாட வீதிகள், முக்கிய சத்திரங்கள், பேருந்து நிலையம், தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பது மிக அவசியம். கருட சேவையின் மாதிரி வீதி உலா வரும் 16-ம் தேதி நடைபெறும். இவ்வாறு சாம்பசிவ ராவ் பேசினார்.