

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஹூப்ளியில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
நடிகையும், முன்னாள் எம்.பி.யு மான ரம்யா, ''பாகிஸ்தான் நரகம் அல்ல. நல்ல நாடு'' எனக் கூறியதில் எந்த தவறும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி திடீரென அங்கு சென்று நவாஸ் ஷெரீப்பை சந்திக்கிறார். அவருக்கு அன்புப் பரிசு அளிக்கிறார்.
முன்னாள் துணை பிரதமர் அத்வானி கூட ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று கூறினார். அப்போது ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, பாஜக உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் எல்லாம் வாயை மூடிக்கொண்டு இருந்தார்கள். பாஜகவும், ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பாகிஸ்தானைப் புகழ்ந்தால் சரி, ரம்யா புகழ்ந்தால் தவறா?
ஆம்னஸ்டி விவகாரத்தையும், ரம்யா விவகாரத்தையும் வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. அதற்கு ஏபிவிபி, விஹெச்பி, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் உதவுகின்றன. பாஜகவினரின் வெறுப்பு அரசியலை எக்காரணம் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாது. இவ்வாறு சித்தரா மையா கூறினார்.