

வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தின நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து, மூத்த அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச யோகா தினமான, 21-ம் தேதி நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சண்டிகரில் நடை பெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ‘ஆயுஷ்’ அமைச்சகத்தின் மூத்த அதிகாரி களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். சண்டிகரில் நிகழ்ச்சி நடைபெற உள்ள ‘கேபிடல் காம்ப்ளக்ஸ்’ அரங்கம், 30,000 பேர் மட்டுமே பங்கேற்கக் கூடியது. ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்க, 1.2 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.
எனவே, நிகழ்ச்சி பங்கேற் பாளர்களை தேர்வு செய்வது மற்றும் இடத்தை விஸ்தரிப்பது போன்ற அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக ‘ஆயுஷ்’ செயலாளர் அஜித் ஷரண் தெரிவித்தார்.
யோகா தினத்தன்று விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அரசு ஆலோசிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. ஆனால், அஜித் ஷரண் இதை மறுத்தார். வரும், 21-ம் தேதி யோகா நிகழ்ச்சி கள், காலை 8 மணிக்கு உள் ளாகவே நிறைவு பெற்றுவிடும் எனவே, விடுமுறைக்கு அவசிய மில்லை என, அவர் கூறினார்.