Last Updated : 12 Sep, 2016 09:00 AM

 

Published : 12 Sep 2016 09:00 AM
Last Updated : 12 Sep 2016 09:00 AM

ஆள்கடத்தல் தலைநகரமாகிறது டெல்லி: தினமும் 21 பேர் கடத்தப்படுகிறார்கள்

டெல்லியில் 2015-ம் ஆண்டு சராசரி யாக தினமும் 21 பேர் கடத்தப் பட்டுள்ளனர். இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் டெல்லி, ஆள்கடத்தல் தலை நகராக உருவெடுத்துள்ளது.

தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பக தகவலின்படி, 2015-ம் ஆண்டில் டெல்லியில் ஒரு லட்சம் பேருக்கு 37 பேர் கடத்தப்பட்டுள்ள னர். இந்த அடிப்படையில் நாட்டிலேயே ஆள் கடத்தலில் டெல்லி முதலிடம் வகிக்கிறது.

2015-ம் ஆண்டில் டெல்லியில் 20,339 வன்முறைக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. தவிர, 7,730 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகி யுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில், அதிக பட்சமாக 11,999 கடத்தல் வழக்கு களும், மகாராஷ்டிராவில் 8,255 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பிஹாரில் 7,128, மத்தியப் பிரதேசத்தில் 6,778, மேற்கு வங்கத்தில் 6,115, அசாமில் 5,831, ராஜஸ்தானில் 5,426, ஹரியாணா வில் 3,520, ஒடிசாவில் 3,236 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் சிறார்களையே குறிவைக்கின்றனர். வழிப்பறி, கொலை, பழிவாங்குதல் உள்ளிட்ட இதர காரணங்களுக்காக வயது வந்தோரும் கடத்தப்படுகின்ற னர். கட்டாய திருமணத்துக்காக சில பெண்கள் கடத்தப்படு கின்றனர்.

கடத்தல் சம்பவங்களை பெரும் பாலானவர்கள் காவல் நிலைய கவனத்துக்குக் கொண்டு வருவ தில்லை. பணத்துக்காக கடத்தப் படுவதால், குடும்பத்தினர் இத் தகவலை மறைத்து விடுகின்றனர்.

டெல்லியில் கடத்தல் குற்றங் களைத் தொடர்ந்து கொள்ளை, பலாத்காரம், கொலை, கொலை முயற்சி, தீ வைத்தல், கலவரம், வரதட்சணை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் அடுத்தடுத்த இடங் களை வகிக்கின்றன.

புள்ளிவிவரங்களைப் பொறுத்த வரையில் உண்மை வேறாக இருக்கிறது என டெல்லி மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறும் போது, “குழந்தைகள் காணாமல் போனதாக பெற்றோர் புகார் தெரிவித்தால், அதனை உடனடி யாக கடத்தல் வழக்காக பதிவு செய்கிறோம். அதுவே, வயதுவந்தோராக இருந் தால் காணாமல் போன பிரிவில் பதிவு செய்கிறோம். ஏனெனில் இவ்விஷயத்தில் தவறான தகவல் காவல் துறைக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.

“டெல்லியில் 2015-ம் ஆண்டு 6,646 சிறுவர்கள் கடத்தப்பட்டுள் ளனர். சிறார் கடத்தல், காணாமல் போன வழக்குகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்துச் செயல் படுகிறோம்” என காவல் துறை யினர் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான சிறார்கள் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறிவிடுவதால் காணாமல் போன சிறார்களை பெற்றோருடன் இணைத்து வைக்க டெல்லி காவல் துறை ‘ஆபரேஷன் மிலாப்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

2015-ம்ஆண்டு இந்தியாவில் 82,999 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 1,260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 774 பேர் மிரட்டிப் பணம் பறிப்பதற்காக கடத்தப்பட்டனர். 18,629 பேர் இதர காரணங்களுக்காக கடத்தப் பட்டுள்ளனர். 31,884 பெண்கள் கட்டாய திருமணத்துக்காக கடத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x