மத்தியபிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

மத்தியபிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
Updated on
1 min read

மத்தியபிரதேசத்தின் மாண்டசார் மாவட்டம், பிப்லியா மண்டி பகுதி யில் ஹிந்தி நாளேடு ஒன்றின் செய்தி யாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கமலேஷ் ஜெயின் என்ற இந்த செய்தியாளர் நேற்று முன்தினம் இரவு தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த இருவர் அவரது மார்பில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பிப்லியா மண்டி காவல் ஆய்வாளர் அனில் சிங் தாக்கூர் கூறும்போது, “இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in