பிஹாரில் பத்திரிகையாளர் படுகொலை வழக்கு: லாலு மகன், சகாபுதீனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிஹாரில் பத்திரிகையாளர் படுகொலை வழக்கு: லாலு மகன், சகாபுதீனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

பத்திரிகையாளர் ராஜ்தேவ் ரஞ்சன் கொலை வழக்கை, பிஹாரில் இருந்து டெல்லிக்கு மாற்றக்கோரும் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், அக்கட்சியின் முக்கிய தலைவர் சகாபுதீனுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிஹார் மாநிலம் சிவானில் இந்துஸ்தான் பத்திரிகையைச் சேர்ந்த ராஜ்தேவ் ரஞ்சன் (42) கடந்த மே 13-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணையை, பிஹார் மாநிலம் சிவானில் இருந்து டெல்லிக்கு மாற்றக் கோரி ரஞ்சனின் மனைவி ஆஷா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவில், ‘கொலை யாளிகளான முகமது கைஃப் மற்றும் முகமது ஜாவேத் ஆகியோர், அண்மையில் சிறையில் இருந்து வெளியான சகாபுதீன் உடனும், மாநில சுகாதார அமைச்சரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜ் பிரதாப்புடனும் நெருக்கமாக காணப்படும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

கொலையாளிகளை தேஜ் பிரதாப் பாதுகாப்பதாக சந் தேகம் எழுகிறது. கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக கருதப் படும் சகாபுதீனை இவ்வழக்கில் போலீஸார் சேர்க்கவில்லை. சகாபுதீன் உள்ளிட்டோரால் எங்களின் குடும்பத்துக்கு அச் சுறுத்தல் உள்ளது.

சிவானில் இவ்வழக்கு விசா ரணை நேர்மையாக நடப்பது கேள்விக்குறி’ என ஆஷா குறிப் பிட்டிருந்தார்.

ஆஷாவுக்கு பாதுகாப்பு

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தேஜ் பிரதாப்புக்கும், சகாபுதீனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஆஷா ரஞ்சன் மற்றும் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு, சிவான் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு உத்தரவிடப்பட்டது.

சகாபுதீன் சிறையில் இருந்து கடந்த 10-ம் தேதி வெளிவந்த பிறகு, ஆஷாவின் கோரிக்கையை ஏற்று, ரஞ்சன் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க மாநில அரசு பரிந்துரை செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

எனவே, இவ்வழக்கில் இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கை விவரங் கள் மற்றும் நிலவர அறிக் கையை அக்டோபர் 17-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என, சிபிஐக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in