

முன்னாள் ஹரியானா முதல்வரும் தேசிய லோக் தள தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 82-வது வயதில் சிறையிலிருந்தே 12-ம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார்.
இளநிலை பயிற்சி ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கி திஹார் சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகிறார் ஓம்பிரகாஷ் சவுதாலா. தற்போது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதையடுத்து பட்டப்படிப்பையும் அவர் மேற்கொள்ளவிருக்கிறார்.
2000-ம் ஆண்டு இளநிலை பயிற்சி ஆசிரியர் நியமன ஊழலில் சவுதாலா குற்றம்சாட்டப்பட்டார். 2013-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
பிற்பாடு இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.