காற்று மாசால் நிமிடத்துக்கு 2 இந்தியர்கள் மரணம்

காற்று மாசால் நிமிடத்துக்கு 2 இந்தியர்கள் மரணம்
Updated on
1 min read

கடந்த 2010-ம் ஆண்டு புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து பிரிட்டனைச் சேர்ந்த ‘தி லேன்சட்’ என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக் கையில் கூறியிருப்பதாவது:

உலகளாவிய அளவில் இந்திய நகரங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாட்னா, புதுடெல்லி உள்ளிட்ட வடஇந்திய நகரங்களில் காற்று மாசின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் நகரவாசிகள் சுவாசக் கோளாறுகளால் பாதிக் கப்படுகின்றனர்.

உலகம் முழுவதும் காற்று மாசினால் நாள்தோறும் 18 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஒரு நிமிடத்துக்கு 2 பேர் உயிரிழக்கின்றனர். அதன்படி ஓராண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்த வரை அனல் மின் நிலையங் களால் 50 சதவீதம் அளவுக்கு காற்று மாசு ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in