

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் கில் முழு அடைப்புப் போராட் டத்தை ஒட்டி, அரசு அலுவலகங் களை மூடச் சென்ற கூர்க்காலாந்து ஆதரவாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. அப்போது போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தின் மலைப்பகுதியான டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக அறி விக்கக் கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்கப் பள்ளிகளில் வங்க மொழி கட்டாய மாக்கப்பட்டது, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினரை ஆவேச மடைய வைத்தது. இதைக் கண்டித்து கடந்த 8-ம் தேதி அவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் ஜிஜேஎம் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து தங்கள் தனி மாநில கோரிக்கையை ஜிஜேஎம் அமைப்பினர் மீண்டும் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனால், பள்ளி, கல்லூரிகள், கடைகள் அடைக்கப்பட்டன. 2-வது நாளான நேற்று அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணியாற்றச் சென்ற தாக கூறப்படுகிறது. இதையறிந்த ஜிஜேஎம் அமைப்பினர் அவர் களைத் தடுத்து நிறுத்துவதற்காக டார்ஜிலிங்கின் பல்வேறு பகுதி களில் உள்ள அரசு அலுவலகங் களை முற்றுகையிடச் சென்றனர்.
அப்போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த அதிவிரைவு படையினர் மற்றும் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த ஜிஜேஎம் ஆதரவாளர்கள் அவர் கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால், அமைதியான முறையில் பேரணியாக சென்றவர் கள் மீது போலீஸார் அறிவிக்கப் படாத தடியடி நடத்தியதாக ஜிஜேஎம் பொதுச் செயலாளர் ரோஷன் கிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே மேற்குவங்க மாநிலத்தில் வன்முறையை கட்டுப் படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் படை விரைவு
டார்ஜிலிங்கில் இயல்புநிலை திரும்ப நிர்வாகம் எடுக்கும் முயற்சிக்கு உதவிடும் வகையில் துணை ராணுவப்படை வீரர்கள் 600 பேரை கூடுதலாக மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.