

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு விரும்பினால் இதுகுறித்து மத்தியக் குழு இறுதி முடிவு எடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அமைப்புசார் மாநாடு கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த மாநாட்டுக்கு பின் செய்தி யாளர்களிடம் பேசிய யெச்சூரி இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி தொடர் பாக, மாநாட்டில் எதுவும் விவாதிக் கப்படவில்லை.
தேர்தல் யுக்திகளை பொறுத்த வரை, உள்ளூர் சூழலின் அடிப்படையில் மாநிலக் குழுக்கள் முடிவு எடுத்து மத்தியக்குழுவுக்கு அனுப்பி வைக்கும். மத்தியக்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழு இதில் இறுதி முடிவு எடுக்கும்” என்றார்.