2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி

2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி
Updated on
1 min read

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி 5 நாட்களுக்கு வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, தொலைத்தொடர்புத் துறை செய லாளர் சித்தார்த் பெஹுரா மற்றும் சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் 122 உரிமங்களை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டு உள்ளது. இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் வெளிநாடு செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனை அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கோரி கனிமொழி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “வரும் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் குடியரசுத் துணைத் தலைவர் தலைமையிலான குழு ருவாண்டா, உகாண்டாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. இக்குழுவில் நானும் இடம் பெற்றிருப்பதால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதைப் பரிசீலித்த நீதிபதி ஓ.பி.சைனி, பல்வேறு நிபந்தனை களுடன் கனிமொழி 5 நாட்களுக்கு மட்டும் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உள்ளார். குறிப்பாக, ரூ.2.5 லட்சம் பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு தொடர்பான சாட்சிகளை தொடர்புகொள்ளக்கூடாது. வெளி நாட்டில் தங்க உள்ள இடம் மற்றும் தொலைபேசி எண் களை நீதிமன்றத்தில் சமர்ப் பிக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in