

ஐ.நா. மனித உரிமை ஆணையத் தில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக கொண்டுவரப்பட் டுள்ள தீர்மானத்தில் பொது கருத்துக்கு ஏற்ப செயல்படுவோம் என்று மத்திய அரசு தெரிவித் துள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யத்தின் 34-வது உச்சி மாநாட்டில் இலங்கை போர்க்குற்ற விவகாரம் குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2015-ல் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை நிறை வேற்ற இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட உள்ளது.
இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் தமிழர் அமைப்புகள் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:
ஆக்கபூர்வமாகவும் கைகோர்த் தும் செயல்படுவதன் மூலமாகவே மனித உரிமைகளைக் காத்திட முடியும். அதன் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவின் செயல்பாடு இருக்கும்.
கடந்த 2015-ல் ஐநாவில் அமெரிக்கா ஆதரவிலான இலங்கை தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இப்போதும் அதேபோன்ற தீர்மானம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவில் முன் வைக்கப்பட்டுள்ளது.
எங்களது நோக்கம் இலங்கை தமிழர்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதாகும். இதை இருவழிகளில் சாதிக்க முடியும். நிர்பந்தப்படுத்தியோ அல்லது புரியவைத்தோ அதை சாதிக்கமுடியும். இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான. உறுப்பினர்களின் மன வேதனை எனக்குப் புரிகிறது. இலங்கை மீதான தீர்மானத்தில் பொதுக் கருத்து அடிப்படையில் செயல்பட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.