Last Updated : 26 Apr, 2014 10:15 AM

 

Published : 26 Apr 2014 10:15 AM
Last Updated : 26 Apr 2014 10:15 AM

விமானத் துறைக்கு தேவகவுடா ரூ.2 கோடி செலுத்த உத்தரவு

முன்னாள் பிரதமர் தேவகவுடா கடந்த 18 ஆண்டுகளாக செலுத்தா மல் இருந்த விமான கட்டணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.2 கோடியை இந்திய விமான துறைக்கு செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை எதிர்த்து தேவகவுடா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு டெல் லியை சேர்ந்த சுபாஷ் சந்தர் அகர் வால் என்கிற தகவல் உரிமை ஆர்வலர், 'இந்திய பிரதமர்கள் மற் றும் அமைச்சர்கள் தங்களுடைய விமான பயணங்களுக்காக இந்திய விமானத் துறைக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்' என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரினார்.

அப்போது முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தனது சொந்த பணிகளுக்காக இந்திய விமானத் துறையை சேர்ந்த விமானங்களை பயன்படுத்தியதற்காக அத் துறைக்கு ரூ. 5.91 கோடி செலுத்த வேண்டும். முன்னாள் பிரதமர் தேவ கவுடா ரூ. 54.91 லட்சம் செலுத்த வேண்டும்.இதே போல முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா ஆகியோரும் விமானங்களை சொந்த பணிகளுக்கு பயன்படுத் தியதற்காக கட்டண தொகை செலுத்த வேண்டியுள்ளது'' என தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமான கட்டணம் செலுத்தாமல் இருக்கும் முன்னாள் பிரதமர்கள், முன்னாள் அமைச்சர்கள் உடனடியாக அந்த தொகையை செலுத்த வேண்டும் என இந்திய விமானத் துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற இணை பதிவாளர் எஸ்.எஸ்.மல்ஹோத்ரா, 'முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதால் அவரிடம் ரூ.5.91 கோடி வட்டியுடன் சேர்த்து வசூலிக்க முடியாது. அதே போல நரசிம்மராவும் மறைந்துவிட்டார். எனவே தற்போது உயிரோடிருக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் விமான கட்டணத்தை செலுத்துமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

கோடிகளில் புரண்ட வட்டி

இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது வழக்கறிஞர் திலீப் புல்ஹாட் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் 2010-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அதில், “1996-97 ஆண்டுகளில் பிரதமராக இருந்த நான் ரூ.54.91 லட்சம் அளவிற்கு இந்திய விமானத்தை சொந்த செலவிற்கு பயன்படுத்தியதாக கூறுவது தவறு. நான் ரூ.28 லட்சம் அளவிற்கு மட்டுமே விமானங்களை பயன்படுத்தினேன்.

அதுவும் எனது கட்சிக்காகவே பயன்படுத்தினேன். எனது சொந்தப் பணிகளுக்காக பயன்படுத்தவில்லை. மீதமுள்ள தொகையானது எனது அமைச்சரவையில் இருந்த சி.எம்.இப்ராஹீம் பயன்படுத்தினார். அவருடைய சொந்த பணிகளுக்கு விமானத்தை பயன்படுத்தியதுகூட எனது கட்டணத்துடன் இணைத்துள்ளனர்'' என்றார்.

கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேவகவுடாவின் மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக் கிழமை தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், “இந்திய விமான துறையின் விமானங்களை தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியற்கான கட்டணத்தை முன்னாள் பிரதமர் தேவகவுடா உடனடியாக செலுத்த வேண்டும்.

1996-ல் ரூ. 54.91 லட்சமாக இருந்த விமான கட்டணத் தொகை 18 ஆண்டுகளுக்கான வட்டியுடன் சேர்த்து அவரிடம் சுமார் ரூ.2 கோடியை இந்திய விமானத் துறை வசூலிக்க வேண்டும்''என கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து தேவகவுடாவின் வழக்கறிஞர் தொடுத்த மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை.

முன்னாள் பிரதமர் தேவகவுடா வெள்ளிக்கிழமை பெங்களூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்திய விமானத் துறையின் கட்டண நிலுவை குறித்த வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள விரும்புவதாக தேவகவுடா தரப்பில் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x