Published : 24 Nov 2014 10:13 AM
Last Updated : 24 Nov 2014 10:13 AM

சார்க் மாநாடு: நாளை நேபாளம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை நேபாளத் துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நேபாள தலைநகர் காத்மாண்டு வில் 18-வது சார்க் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை காத்மாண்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, சீதா தேவி பிறந்ததாகக் கூறப்படும் ஜனக்பூர், புத்தர் பிறந்த இடமான லும்பினி, முக்திநாத் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு செல்ல மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் இத்தகைய இடங்களுக்கு மோடி செல்லும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளி யுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் சையது அக்பருதீன் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, நேபாள சுற்றுப் பயணத்தின்போது தலைநகர் காத்மாண்டுவில் நடை பெறும் சார்க் உச்சி மாநாட்டில் மட்டும் கலந்துகொள்வார். ஏற்கெனவே திட்டமிட்டபடி, இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், நேபாளத்தின் பிற பகுதிகளுக்கு அவர் செல்லும் திட்டம் இல்லை. எனினும், வாய்ப்பு கிடைத்தால் ஜனக்பூர், லும்பினி, முக்திநாத் உள்ளிட்ட நேபாளத்தின் பிற பகுதிகளைப் பார்க்க அவர் மிகவும் ஆவலாக உள்ளார்.

சார்க் மாநாட்டின்போது நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் தனியாக சந்தித்து பேசுவார்களா என்று கேட்கிறீர்கள். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களுடனும் ஆக்கப்பூர்வ பேச்சு நடத்த வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம்.

இரு நாடுகளுக்கிடையே ஏற்கெனவே கையெழுத்தாகி உள்ள சிம்லா உடன்படிக்கை மற்றும் லாகூர் பிரகடனம் ஆகிய வற்றுக்கு உட்பட்டு பாகிஸ்தானு டன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அக்பருதீன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x