

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி பெரு நாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கியூபா தலைநகர் ஹவாணாவுக்கு சென்றார்.
2 நாள் பயணமாக கியூபா சென்றுள்ள அன்சாரி, அந்நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.
பிடல் காஸ்ட்ரோ உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கம்யூனிச நாடான கியூபாவுடன் இருதரப்பு உறவை வளர்ப்பது தொடர்பாக இந்தியா சார்பில் முக்கியப் பிரமுகர் (குடியரசு துணைத்தலைவர்) ஒருவர் பயணம் செய்திருப்பது இதுவே முதன்முறை என்பதால் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது. கியூபாவின் வெளியுறவு அமைச்சர், கியூபாவுக்கான இந்திய தூதர் சி.ராஜசேகர் மற்றும் துணை ஜனாதிபதி அன்சாரியின் மனைவி ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.