அசாமில் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு: பிரதமர் பயணத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

அசாமில் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு: பிரதமர் பயணத்துக்கு கூடுதல் பாதுகாப்பு
Updated on
1 min read

அசாம் மாநிலம், டின்சுகியா மாவட்டத் தில் இருவேறு இடங்களில் நேற்று ஆயுதக் குவியல் கண்டுபிடிக் கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அசாமில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் தலைநகர் குவாஹாட்டியில் வரும் 30-ம் தேதி நடைபெறும் காவல்துறை தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பிரதமர் வருகையின்போது பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட உல்பா தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டின்சுகியா மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் இருவேறு இடங்களில் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது.

டோகாஜன் என்ற கிராமத்தில் ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கி குண்டுகள், 5 வெடிகுண்டுகள் சிக்கின. இதேபோல் திஸ்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட குவாஹாட்டி-ஷில்லாங் சாலையில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

அதில் 30 பாக்கெட் ஜெலட்டின் குச்சிகள், 18000 டெட்டோனட்டர்கள், 12 பாக்கெட் கார்டெக்ஸ் ஆகியவை கோணிப் பையில் மறைத்து வைக் கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தின் டிரைவர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தீவிரவாதி சுட்டுக் கொலை

திப்ருகார் மாவட்டம் பெட்டோ நிசக் கிராமத்தில் நேற்று போலீஸாருக்கும் உல்பா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். 3 தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மோடியின் பயணத்தின்போது கூடுதல் பாது காப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது என்று மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in