Published : 28 Nov 2014 10:47 AM
Last Updated : 28 Nov 2014 10:47 AM

ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் ரத்து

தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டி முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால் நேற்று முதல் ஹைதராபாத் உட்பட ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் தெலுங்கு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து ஆந்திர மாநில திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் வெங்கடேஷ் ஹைதரா பாத்தில் நேற்று கூறியதாவது:

தெலுங்கு மொழியில் உரு வாகும் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படு கிறது.

மேலும் சங்கத்தில் உறுப் பினர்களாக இல்லாதவர்களை பணியில் ஈடுபடுத்தும் உரிமை தயாரிப்பாளர்களுக்கு உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து தினமும் பணிபுரிய வேண்டி உள்ளது. ஆனால் சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் குறைந்த நாட்களில் அதிகமாக பணி செய்ய வேண்டி உள்ளது. உண்மையில் சிறிய பட்ஜெட் திரைப்படங்களில்தான் அதிக நேரம் பணி செய்ய வேண்டி வரும்.

எங்கள் சங்கத்தில் உள்ள 24 பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர் கள், தொழிலாளர்களை மட்டுமே தயாரிப்பாளர்கள் பணியில் அமர்த்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மேலும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தெலுங்கு படங்களில்தான் அதிக ஊதியம் வழங்குவதாக நாடு முழுவதும் கூறுவதுண்டு, ஆனால் இது உண்மையல்ல.

மும்பையில் ஒரு நாள் கால்ஷீட் என்பது காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே. ஆனால் இங்கு காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்ய வேண்டும்.

இவர்கள் இரண்டு நாள் வேலையை ஒரே நாளில் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்பதே எங்களுடைய நியமான கோரிக்கை என வெங்கடேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x